புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய அளவிலான பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக.,வில் தேசியளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலில், 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச்செயலாளர்கள், இணையதள இளைஞர் பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள மோடி, “புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். கட்சியின் பாரம்பரியத்தைக் காக்கும்வகையில் சுயநலமின்றி செயல்பட்டு ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைப்பார்கள் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.