விவேகானந்தரின் பிறந்தநாளை யொட்டி, பிரதமர் மோடி விவேகானந் தரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு, விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதியை தேசியஇளைஞர் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்றிலிருந்து ஆண்டு தோறும், ஜனவரி 12 ஆம் நாள் தேசிய இளைஞர்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பிரதமர் மோடி விவேகானந்தரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று அவரை நான் தலைவணங்குகிறேன். தேசிய இளைஞர்தினமான இன்று புதிய இந்தியாவை உருவாக்கும் நம்நாட்டின் இளைஞர்களை வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply