புதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள்  மக்களை சென்றடைய வேண்டும். இதில் உள்ள தடைகளை உடைத் தெறிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

பிரதமரின் அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் பேசியதாவது: அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் சாமானியமக்களை சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவேண்டும்.

கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பல்வேறுதுறைகள் இடையே வலுவான தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களிலேயே புதிய கண்டுபிடிப்புகள் தேங்கிவிடக்கூடாது. இதில் உள்ள தடைகளை உடைத்தெறிய வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறமைகளை அடையாளம்கண்டு அதை வளர்ப்பதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்ட மற்றும் பிராந்திய அளவிலான அடல் ஆய்வகங்களுடன் இணைப்பு ஏற்படுத்தவேண்டும். வேளாண் வருமானத்தை அதிகரிப்பது, நாள்பட்ட மற்றும் மரபணு நோய்களுக்கு தீர்வு, கழிவுப்பொருட்கள் மேலாண்மை, இணையதள பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Leave a Reply