புதிய வாக்காளர்கள் கட்சிபார்த்து வாக்களிக்கமாட்டார்கள். சிறந்த செயல்பாடுகளை பார்த்துதான் வாக்களிப்பர். எனவே அவர்களின் ஓட்டு பாரதிய ஜனதாக்குத் தான் கிடைக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரை யாடும் நிகழ்ச்சி தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேனிமாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தேனி நகர பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் ராஜேஷ், ‘‘மக்களவை தேர்தலில் புதிதாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள். இளம் வாக்காளர்களிடம் நாங்கள் எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும்?’’ எனப் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்து பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

முதலில் புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். புதிய வாக்காளர்கள் கட்சிபார்த்து வாக்களிக்கமாட்டார்கள். யார் சிறப்பாக செயல்படுகிறார்கள், யார் சிறந்த வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளனர் என்பதைப் பார்த்து வாக்களிப்பர். அந்தவகையில் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பயனுள்ள வகையில் வாக்களிக்க வேண்டும். நாம் கொண்டு வந்த ஸ்டார்ட் அப், டிஜிட் டல் இந்தியா, தூய்மைஇந்தியா ஆகிய திட்டங்களை முன்னெடுத்து நீங்கள் பிரச்சாரம் செய்யலாம் என்றார்.

Leave a Reply