புதுவையில் வரும் மே 16–ந் தேதி சட்ட சபை தேர்தல் நடகிறது. தேர்தலில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைக்க பா.ஜனதா திட்டமிட்டது. ஆனால் முதல்–அமைச்சர் ரங்கசாமி தரப்பில் இருந்து எந்தபதிலும் கிடைக்காததால் முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து புதுவை மாநில பாரதீய ஜனதா பொறுப்பாளர் மகேஷ்கிரி எம்.பி. கூறியதாவது:–

புதுவையில் பா.ஜனதா தனித்தே போட்டியிடும் நிலை தற்போது உள்ளது. ஆளும் என்ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் முதல்–அமைச்சர் ரங்கசாமி எந்தமுடிவையும் அறிவிக்கவில்லை.

பிறகட்சியினர் அனைவரும் தங்கள் தேர்தல்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பணிகளை தொடங்கவேண்டும் என வற்புறுத்தினர். இதனால் முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஆளும் கட்சியை பொறுத்தவரை கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன. அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறும்.

கடந்த 23 மாதமாக இந்தியாவை முன்னேற்றவும், ஏழை, எளியமக்கள் வாழ்க்கை வளம்பெறவும் பிரதமர் மோடி தலைமையில் பாரதீய ஜனதா அரசு கடுமையாக பாடுபட்டுவருகிறது. பாரதீய ஜனதாவின் கொள்கைகளை ஏற்கும் எவரும் கூட்டணியில் சேரலாம். இந்து மக்கள்கழகம், லோக்ஜனசக்தி, இந்தோபிரெஞ்சு கட்சி போன்றவை பாரதீய ஜனதாவுக்கு ஆதரவுதெரிவித்துள்ளன.

புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, தேசியதலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் வரஉள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்கான யுக்தி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். வரும்தேர்தலில் புதுவையில் பாரதீய ஜனதா சிறப்பான வெற்றியைப் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply