முதன்முறையாக மோதிஜி வெளியிட்ட செய்தி. ஆம்.. வங்கியின் NPA – Non-performing asset பற்றி காங்கிரஸ் வெறும் 36% என்று கூறியது தவறு. வங்கிக்கடன்களில் 82% NPA தான். அதாவது காங்கிரஸ் காலத்தில் வங்கிகள் மூலம் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட 52 லட்சம் கோடிகள் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் கொடுக்கப்பட்டதே..!

பிரதமர் மோதிஜி கூறியது,”நாங்கள் அரசாங்கத்தை நடத்த ஆரம்பித்த பொழுது இந்திய பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் இருந்தது. அப்போதே இந்திய வங்கிகளின் உண்மையான நிலமையை வெளியே கூறியிருந்தால்.. ஒவ்வொரு முதலீட்டாளர்களும் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள். அதன் பின்விளைவாக ஒரு பேரழிவு நிலைக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் தள்ளப்பட்டிருக்கும்” என்றார்.

இதோ பிரதமர் மோதிஜி அவர்களின் வார்த்தைகளிலேயே…

“முன்பெல்லாம் டெலிபோன் கால்கள் பொதுவாக தங்கள் கூட்டத்தவருக்கு லோன் வசதி செய்து தர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பதவியில் இருந்தவர்களின் தொழில்களுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒருவேளை நான் பதவி ஏற்றதும் இதனை வெளியே சொல்லியிருந்தால்… நம் பொருளாதாரம் பலத்த சேதத்தை அடைந்திருக்கும்.

நான் தேச நலனுக்காக வாய்மூடி, காங்கிரஸ் செய்த தவறை நன்றாக தெரிந்திருந்த போதும் மௌனமாக இருந்தேன். ஆனால் இப்போது உண்மையை வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் தற்போது வங்கிகள் நல்ல ஒரு ஸ்திரத்தன்மையை அடைந்துவிட்டது. அதோடு 10 வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதையும் மக்கள் அறிய வேண்டும்.

NDA பதவியேற்ற பிறகு, இதுவரை ஒரே ஒரு லோன் கூட NPA வாக மாறவில்லை. மாறுவதற்கான லோன் கொடுக்கப்படவில்லை.

இப்போதாவது பாரத மக்கள் எந்த அளவு காங்கிரஸ் தேச பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்தது என்பதை உணரவேண்டும். இந்த ஒரே ஒரு ஊழலிலேயே நம் தேசம் இழந்தது 52 லட்சம் கோடி.

ஆம்… 520,00,00,00,00,000 கோடிகள் பணம் இந்த தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது இதனோடு 2G, CWG, Coal, மற்றும் National Herald ஊழல்கள்“ என்றார்..!
மோதிஜியை ஆதரிக்காதவர்களுக்கு… நடுநிலை பேசும் அதிமேதாவிகளுக்கு…

இப்போது புரிகிறதா.. உணர்கிறீர்களா.. தற்போதைய அரசாங்கம் எதனால் இலவசங்களையும் வரி தள்ளுபடிகளையும் அள்ளி வழங்கவில்லை என்று. அதனால் கஷ்டப்படப் போவது நடுத்தரவர்கமே என்பதை பிரதமர் உணர்ந்ததால் மட்டுமே சகட்டு மேனிக்கு ஓட்டு வேட்டை ஒன்றையே குறியாக பிரதமர் கொள்ளவில்லை.

இவைகள் அனைத்தையும் உங்கள் மேல் திணித்தவர்கள்.. இதுவரை தொடர்ந்து பல பொருளாதாரக் குற்றங்களைச் செய்த ஊழல் திலகங்களான காங்கிரஸே. ஆனால் நீங்கள் அவர்களைத்தான் உங்களைக் காப்பவர்களாக திடீரென்று வரிந்திருக்கிறீர்கள்..!

இந்த அறிவுரைகள் எதுவுமே உங்கள் காதுகளில் விழாமல் நாங்கள் காங்கிரஸையும் எதிர்க்கிறோம், பிஜேபியையும் எதிர்க்கிறோம். அதனால் “நோட்டா” விற்கு ஓட்டளிப்போம் என்று மறைமுகமாக காங்கிரஸிற்கு உதவினால்… இந்த தேசத்தை மட்டுமல்ல உங்களின் அடுத்த சந்ததியையும் காப்பாற்ற கடவுள் கூட வரமாட்டார்..!

Leave a Reply