பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் உள்ள ஸவன்டெம் விமானநிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அருகில் உள்ள மெட்ரோரெயில் நிலையத்திலும் குண்டுவெடித்தது. இந்த தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாய ங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடித்ததில் விமான நிலையகூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது.

சிகிச்சைபெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“புருசெல்சில் இருந்துவரும் செய்திகள் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதல்கள் கண்டிக்கத் தக்கது. தாக்குதலில் பலியானோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்” என மோடி டுவிட் செய்துள்ளார்.

Leave a Reply