காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதற்குபதிலடியாக, ராணுவத்தினர் என்கவுன்டர் நடத்தினர்.

தீவிரவாதிகளுடன் நேற்று தொடங்கி நடைபெற்ற கடும்சண்டையில், பாதுகாப்பு படையினர் 4 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர். சிலதீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ஆக்ரோஷ தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகசெயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் ஹாஜியை சுட்டுக்கொன்றனர்.

இவன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என்றும், வெடிகுண்டு மற்றும் தற்கொலைப் படை தாக்குதலில் கைதேர்ந்தவன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்துல் ரஷீத்துதான், புல்வா மாவில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஃதில் அகமதுதாருக்கு பயிற்சி அளித்ததும் தெரிய வந்துள்ளது.

 

Leave a Reply