மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத்மஹாஜனின் மகளும் பிஜேபி இளைஞர் அணியின் அகில இந்திய தலைவருமான பூனம் மஹாஜன், சென்னையில் நடிகர் ரஜினி காந்தை நேரில் சந்தித்துபேசினார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி காந்தின் இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து பூனம் பேசினார். லதா ரஜினி காந்தையும் சந்தித்த அவர், இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்தசந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்று, பிஜேபியினர் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது பிஜேபியில் சேருவாரா என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.பிஜேபி நடத்திய கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்துவந்த நேற்றிரவே பூனம் மகாஜன் சென்னை வந்தார்.பூனம் மகாஜனிடம் இதுகுறித்து கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply