பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து புதியஉச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள்விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் விலை அதிகரித்திருகிறது.


இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களிடம்  கூறியதாவது:


பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை; அது மத்தியஅரசின் கைகளில் இல்லை. ஒபெக்நாடுகள் குறைந்த அளவு எண்ணெய் உற்பத்தி செய்துவருகின்றன. இந்தப் பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வை காணும்.


பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரிப்பால், நாட்டுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக, நடுத்தட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருள்கள் விலையானது நிலை யானதாக இருத்தல் அவசியமாகும். அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருள்கள்விலை உயர்வானது, வாடிக்கையாளர்கள், இந்தியப் பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் தர்மேந்திர பிரதான்.

Leave a Reply