இன்றைக்கு எழுந்துள்ள கேள்வி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்தல்ல. ஏற்கனவே அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு விட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு அதிகாரம்வழங்க ஆண்கள் யார்? பெண்களின் இன்றையதேவை, அவர்கள் தங்களது உள்ளார்ந்த பலத்தை தெரிந்து கொள்வதுதான்.

பெண்களுடைய உள்ளார்ந்த பலம், அவர்களை எத்தனையோ பிரச்சினைகளையும் தாண்டியும், வாழவைக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நடந்துவருகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாக கிடைத்த போதும், பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த நாட்டை கட்டமைத்து உருவாக்கியதில் பெண்களின்பங்கு முக்கியமானது.

சாலைகளோ, பணமோ, பட்ஜெட்டோ, மின் சக்தியோ அல்லது இன்ன பிற வளங்களோ ஒரு நாட்டை உருவாக்கிவிடாது. ஒரு நல்ல குடிமகனால்தான் ஒரு நாட்டை உருவாக்க முடியும்.

மனைவியின் மரணத்துக்கு பின்னர் ஒரு ஆணால் நீண்டகாலம் வாழ முடியவில்லை. குடும்பத்தை சரிவர நடத்திச்செல்ல முடியவில்லை. ஆனால் கணவரின் மரணத்துக்கு பின்னரும் மனைவி நீண்டகாலம் வாழ்கிறார். குடும்பத்தை சீரும், சிறப்புமாக வழிநடத்திச் செல்கிறார் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்கள், சபையில் சட்டம் இயற்றப் படுகிறபோது அது என்ன மாதிரியான விளைவுகளை, தாக்கங்களை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை கவனமாக ஆராயவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் உங்கள் தொகுதியில் நீங்கள் முத்திரை பதிக்கவேண்டும். உங்களைப் பற்றிய நல்லவிதமான எண்ணத்தை மக்கள்மத்தியில் ஏற்படுத்திவிட்டால், அது உங்களுக்கு நீண்ட காலத்துக்கு பலன்தரும்.

எல்லா மட்டத்திலும் மூன்றில் ஒருபங்கு பெண்கள் பிரதிநிதித்துவம் அளித்து வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் (உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள்) ஒரு நாள் செல்ல வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் வழங்க முயற்சிக்க வேண்டும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்யவேண்டிய காரியம் ஆகும்.

உங்களால் முன் நின்று செய்யமுடியும் என்றால், ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இன்றைய நவீன நிர்வாகத்தில், பெண்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கு கிறார்கள். ஆண்களைவிட பெண்கள் தொழில்நுட்ப வல்லுனர்களாக திகழ்கிறார்கள். சமையல் அறையில் நவீன சாதனங்களை திறன்பட கையாண்டு அவர்கள் அதை நிரூபித்து வந்திருக் கின்றனர். வாக்காளர்களிடமும் நீங்கள் தொழில்நுட்பத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

தகவல் தொடர்பு திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாள் நடப்பதையும் டைரியில் குறித்து வைத்துவர வேண்டும். ஆண்டு இறுதியில் பார்த்தால் அது ஒரு அறிவு களஞ்சியமாக இருக்கும். எங்கும் நீங்கள் பேசுவதற்கு அது உதவும்.

Tags:

Leave a Reply