எந்ததிட்டமாக இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மனதில்வைத்தே உருவாக்க படுகின்றன. ”மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில், பொதுசுகாதார திட்டங்களுக்கு, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவீதம் செலவிடப்படும்,”

எந்ததிட்டமாக இருந்தாலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை மனதில்வைத்தே உருவாக்கப்படுகின்றன. முக்கியமாக, இந்தப்பிரிவினரின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன்படியே, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற, இலவசமருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினோம்.

அடுத்தக்கட்டமாக, நாடுமுழுவதும், 2022க்குள், 1.5 லட்சம் சுகாதார மற்றும் நலமையங்கள் அமைக்கப்பட உள்ளன. மக்கள் தங்கள் பகுதிகளிலேயே, மருத்துவ பரிசோதனை, சிகிச்சைகளை பெற, இது உதவும்.

தற்போது, சுகாதாரதுறைக்காக, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.15 சதவீதம் செலவிடப்படுகிறது; இது, 2.5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போது செலவிடப்படும் தொகையைவிட, 325 சதவீதம் அதிகமாகசெலவிடப்பட உள்ளது.

நேற்று நடந்த, ‘2018 பார்ட்னர்ஸ்’ அமைப்பின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Leave a Reply