மெர்சல் படத்தில் விஜய் ஒரு ஊரில் கோயில் கட்டுவதற்கு பதிலாக அதில் மருத்துவமனை கட்டலாம் என்றிருப்பான்

அதை ஒரு கிறித்தவ சர்ச்சுக்கு முன்னோ இல்லை இஸ்லாமியர்களின் மசூதிக்கு முன் நின்று கூறுவதாக படம் எடுக்க முடியுமா! —என்று Vibin Raj தன்பதிவில் கேள்வி கேட்டிருந்தார், அப்போது எனக்கு ஏற்பட்ட கருத்து கீழே….
……

நான் இருபத்தைந்து வருடத்திற்கு முன் கல்பாக்கம், கூவத்தூர், தொடர்ச்சியாக சிலவூர்கள்.

அங்கிருந்து மதுராந்தகத்திற்கு போகிற சாலையில் பாலூர், பவுஞ்சூர் நெடுகவும் சிறுவயதில் பயணம் செய்துள்ளேன்.

அப்போது கல்பாக்கத்தில் ஒரு சில முஸ்லீம் தலைகள் அரிதாக தென்படும், கிறிஸ்துவர்கள் தனி அடையாளமாக இருக்க மாட்டார்கள் அதனால் அவர்கள் ஓரிருவர் இருப்பதுவும் சந்தேகம்தான்.

ஆனால் இன்று நிலை தலைகீழ், எல்லா இடத்திலும் பள்ளிவாசல் இருக்கிறது, எங்களது தோட்டமுள்ள பரமங்கேணியில் ஒரு முஸ்லீமும் கிடையாது அங்கும் பள்ளிவாசல். முகையூரில் பெரிய ஜெபக் கூடம்.

அதே போல் பவுஞ்சூர் பகுதிகளிலும் மசூதியும் உள்ளது, ஜபக்கூடமும் உள்ளது. . அவற்றின் வளர்ச்சி கொஞ்சமானது அல்ல.

முகையூர் தோப்பில் சிவன் கோவில் கட்ட கிறிஸ்துவ சபை எதிர்ப்பு தெரிவிக்கிறது, கோர்ட்டில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று ஸ்டேயார்டர் வாங்க முயல்கிறது என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்கு போகும் கூட்டம் வழி நெடுக அம்மன் கோவிலில் தங்கித்தான் போகிறது. அது தனிகதை.

கொடுவூர்,கரிக்காமலை,முகையூர், என்றுகிருத்துவரே இல்லா ஊரில் கூடங்களை கட்டி வைத்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனை ஊருக்கு ஊர் எங்கும் காணோம்.

இந்து கோவில் முன்புப் போலில்லை, புது பொலிவோடு இருக்கிறது. அதற்கு எல்லாம் உள்ளூர் காசுதான் காரணம். மசூதியும், சர்ச்சும் போல் வெளி நாட்டு காசுகள் அல்ல. .

உதாரணந்தான் இது, தமிழக நெடுகிலும் இதுதான் நிகழ்கிறது. ஏற்கணவே அருகி வரும் கோவிலை விடுத்து அளவுக்கு அதிகமாக. பெருகும் மசூதிகளையும், சர்ச்சிகளை மருத்துவமனையாக்க முயலுலாமே, தளபதி விஜய்.
 

நன்றி அமரன்

Leave a Reply