பெல்ஜியத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு எதிரொலியாக அந்நாட்டிற்கு பிரதமர் மோடி செல்வது ரத்து செய்யப் படாது என மத்திய அரசு கூறியுள்ளது. 

பெல்ஜியம் தலை நகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமானநிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 34 பேர் பலியானார்கள். இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

தீவிரவாதம் உலகிற்கே சவாலாக மாறிவருவதற்கு இந்த தாக்குதல் ஒருஉதாரணம் என்று கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப், பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை எனத் தெரிவித்தார்.  

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பெல்ஜியத்திற்கு வரும் 30ந் தேதி பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது ரத்துசெய்யப்படாது என்றும் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார். 

திட்டமிட்டபடி இந்தமாத இறுதியில் பிரதமர் மோடி பெல்ஜியம் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Leave a Reply