தமிழக ஆளுநர் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுவருவது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து சட்டவல்லுநர்களை ஆலோசித்து ஆளுநர் முடிவு எடுக்கவேண்டும் என்றார்.

ஆளுநரின்கடமை என்பது ஆழ்ந்து ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும் என்று கூறிய பொன்னார், பொறுப்பு ஆளுநர் என்பதைவிட பொறுப்புடன் செயல்படுகிறாரா என்பதைதான் பார்க்கவேண்டும் என்றார்.

ஆளுநர் எடுக்கும் முடிவு ஏழுகோடி தமிழர்களின் நலன்சார்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்று தெரிவித்தவர், கழகங்கள் இல்லாத தமிழ்நாடு இருக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றார்.

Leave a Reply