தேர்தல்கூட்டணி குறித்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழக பாஜக பேச்சு வார்த்தை நடத்தி முடித்து விட்டது; இனி கட்சி மேலிடம் தான் இறுதி முடிவெடுக்கும் என்று மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

 தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக முதல்வர்வேட்பாளர் அன்புமணி ஆகியோரை பலமுறை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து பேசிவிட்டனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கூட்டணிதொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துவிட்டோம்.

எங்களது கருத்துகள், முடிவுகளை அறிக்கையாக கட்சி மேலிடத்துக்கு கொடுத்து விட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது மேலிடம் தான். தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார் த்தைகளை மேற்கொள்வார். அதனைத்தொடர்ந்து கூட்டணி இறுதிவடிவம் பெறும். அடுத்துவரும் ஓரிரு நாட்களில் கூட்டணி இறுதி வடிவம் பெற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிடுவோம். இவ்வாறு இல. கணேசன் கூறினார்.

Leave a Reply