பேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. தனது கணவர் சிவக்குமாருடன் பாஜகவில் இணைந்துள்ளார் சரிதா.
 
அண்ணாவின் தத்துப்பிள்ளையான கவுதமனின் ஒரே மகள் தான் சரிதா. இதுவரை அரசியல் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்த சரிதா தற்போது தனது கணவருடன் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை யகத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுக்கு இயற் கையாக அரசியல்ஆர்வம் உண்டு. தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். தற்போது நாங்கள் அரசியலில் நுழைவதற்கான நேரம் இது என்று எண்ணி வந்திருக்கிறோம்.
 
மோடியின் வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்துள்ளோம். அண்ணா, காமராஜரை மிகவும் மதித்தார். ஆனால் காமராஜர் இருந்த காங்கிரஸ்கட்சி, இந்தி ஆதரவு கொள்கையை கொண்டு இருந்தது. எனவேதான் அண்ணா, காங்கிரசை கடுமையாக எதிர்த்து தமிழகத்தில் திமு.க.வை உருவாக்கி அதில் வெற்றியும்பெற்றார்.
 
ஆனால் தற்போது திமுக இதே காங்கிரசுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்திக்கிறது. அண்ணா வளர்ச்சியான தமிழகம், ஊழல் இல்லா தமிழகத்தை விரும்பினார். அதனை பாஜகவால் மட்டுமே கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. மேலும் அப்போது அண்ணாவின் இந்திஎதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. அதேபோல் இன்று, மோடியின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் ஆதரிக் கின்றனர். அன்றைய சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலை வேறு.
 
மக்கள் விரும்புவது ஊழலற்ற, வளர்ச்சியான ஆட்சியைதான். தமிழுக்காகவும், தமிழர்களின் நலனுக் காகவும் தான் அண்ணா கட்சிதொடங்கினார். ஆனால் இன்று அந்தகட்சியில் குடும்ப அரசியலும், ஊழலும்தான் உள்ளது. இதனால் மக்கள் நலன் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால்தான் நான் பாஜகவில் என்னை இணைத்து கொண்டேன்.
 
மேலும் அண்ணா குடும்ப அரசியலை ஊக்குவித்து இருந்தால், இன்று எங்கள்குடும்பம் இப்படி இருந்திருக்க மாட்டோம் என்றார் சரிதா. சரிதா தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இருப்பினும் தான் நிற்கவாய்ப்பில்லை என்றும் தனது கணவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சரிதா கூறியுள்ளார்.
 

Leave a Reply