பிரதமர் மோடி  மக்களை  திறந்தவெளியில் அல்லது பொதுஇடங்களில் துப்புவதை தவிர்த்து குப்பை தொட்டிகளில் துப்புங்கள் என ஆலோசனை கூறியுள்ளார்.

உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்து  ஆடுகிறது. இந்தியாவிலும் குறைந்த நிலை இல்லை. இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நேற்று அதாவது வியாழக்கிழமை மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, திறந்த வெளியில் அல்லது பொது இடங்களில் நடந்துசெல்கையில் கண்ட இடங்களில் துப்புவதை தவிர்த்து குப்பை தொட்டிகளில்துப்புங்கள்.

வெளியில் செல்கையில் முகக்கவசம் அணிவதை வழக்கப் படுத்துங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் புதிதாக தோன்றியுள்ள பழக்கமாகிய அடிக்கடி கைகழுவும் பழக்கத்தை இனியும் மறக்காமல் தொடர்ந்து நடைமுறை படுத்துங்கள். இந்த பழக்க வழக்கங்கள் நமது கலாச்சாரத்தில் ஒன்றாக மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Comments are closed.