முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி  அ.தி.மு.க.வில் இருந்துவிலகி பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக. அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொன்னுசாமிக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து பொன்னு சாமி கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்குபிறகு அ.தி.மு.க.வில் தலைமை இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு தொடரமுடியாத மனவேதனையில் இருந்தேன். அப்போது பொன்.ராதா கிருஷ்ணன் என்னை தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில் இன்று (நேற்று) பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.

பா.ஜ.க.வில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கட்சி எனக்கு எந்தபொறுப்பை தந்தாலும் அதை ஏற்று பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பிரதமர் மோடி கூறியதால்தான் பிரிந்த அணியுடன் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியது பற்றி மத்திய மந்திரியிடம் பொன்.ராதா கிருஷ்ணனிடம் நிருபர்கள்கேட்டனர்.

இதற்கு பதில்அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘ஆட்சியில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. பிரதமரை ஓ.பன்னீர் செல்வம் ஏன் சுட்டிக் காட்டுகிறார் என்று தெரியவில்லை’ என்று கூறினார்.

 

Leave a Reply