மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச வர்த்தக மாநாட்டில் பொருளா தாரத்தைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச வர்த்தக மாநாட்டின் நேற்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தமாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டினை அருண் ஜெட்லி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்சியில் அருண்ஜெட்லி பேசியதாவது:- பாஜக., அரசின் பலமே தேசியபாதுகாப்பு என்று வரும்பொழுது அதற்காக எதையும் சமரசம்செய்யாமல் இருப்பதுதான். பொருளாதாரத்தை காட்டிலும் நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்.இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசின் வளர்ச்சியும் கட்டாயம் முக்கியமானது. அரசியல் வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு வலிமையான மாநிலங்கள்தான் வலிமையான இந்தியா. தற்போது நாட்டில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் வருவாய் பற்றாக்குறை உள்ளவையாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் மேற்கு வங்காள மாநிலம் 6 முதல் 7 சதவீதம் ரை பங்களிப்பு செய்கிறது. மேற்குவங்காள மாநிலத்தை பொறுத்த வரை கடந்த 40 வருடங்களாக மாநில அரசின் கொள்கையால் பாதிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற தேர்தலில் யார்யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும்நிச்சயம். பா.ஜ.க., மட்டும் யாருடனும் கூட்டணி அமைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply