பொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டார். அப்போது பேசியவர், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருவதாக குறிப்பிட்டார்.

விரைவில் நிழல்பொருளாதார சூழலில் இருந்து, நிஜபொருளாதார சூழலுக்கு நாம் செல்வோம். சீர்திருத்த நடவடிக்கைகளை பொறுத்த வரை, நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது இழப்புகளும், பாதிப்புகளும் இருக்கலாம். ஆனால் தொலை நோக்கு பார்வையுடன் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களால் மிகப் பெரிய நிலையை அடையப் போகிறோம். அனைத்து விதமான வரி விதிப்புகளும் குறைவாக இருக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தில் வங்கிகளின்செயல்பாடு மிகவும் முக்கியம். இதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகமாறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply