பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 முதல் 8 சதவீதத்தில் நிலையாக இருப்பதாக மத்திய நிதிய மைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசியவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2 புள்ளி 5 டிரில்லியன் டாலர் மதிப்பை நெருங்கிஇருப்பதாக கூறினார். பொருளாதார வளர்ச்சியை மேலும் 4 சதவீதம் உயர்த்துவதை அரசு குறிக் கோளாகக் கொண்டுள்ளதாவும், விரைவில் இதற்கான குறியீட்டு எண் இரட்டைஇலக்கமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் உள்கட்ட மைப்பை சர்வதேசதரத்தில் மாற்றுவது என்பது தற்போது அரசு முன்இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் கூறிய அருண்ஜெட்லி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 லட்சம்கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் தேவைப்ப டுவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply