5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைகுழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு வழங்கும் என தெரிவிக்க ப்பட்டு உள்ளது. நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக்தேப்ராயை குழுவின் தலைவராக நியமித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த ஐவர்குழுவில் சுர்ஜித பாலா, ரதின் ராய் மற்றும் அஷீமா கோயல் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக உள்ளனர். நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாடல் குழுவின் செயலாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

இந்த குழுவானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags:

Leave a Reply