”நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் நீதிகிடைப்பதை உறுதிசெய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படை,”

நாட்டை ஆளும் அரசுக்கு, பலமுக்கிய, கடமைகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிகிடைப்பதை உறுதிசெய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரது மீதான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படைஅம்சங்கள். நாட்டில் உள்ள, 130 கோடி மக்களுக்கும் சேவைசெய்வதையே, மத்திய அரசு, முக்கிய கடமையாக கருகிறது.

எங்களுக்கு முன், மத்தியில்இருந்த அரசுகள், மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறையுடன் செயல் பட்டது இல்லை.ஆனால், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை அறிந்து, அவற்றுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளை, பா.ஜ., தலைமையிலான அரசு செய்து வருகிறது.

முந்தைய அரசுகள், மாற்றுத் திறனாளிகளுக்காக, ஒருசில முகாம்களை அமைத்தன. ஆனால், பா.ஜ., அரசு, கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 9,000 முகாம்களை அமைத்துள்ளது. முந்தைய அரசு, மாற்றுத் திறனாளி களுக்கான உபகரணங்களுக்காக, 380 கோடி ரூபாய் மட்டுமே செலவுசெய்தது. ஆனால், பா.ஜ., அரசு, 9,000 கோடி மதிப்பிலான உபகரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக அளித்துள்ளது.

இந்த உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கும். பொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், மாற்றுத் திறனாளிகளின் உண்மையான பலம். இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதும், முகாம்களை அமைப்பதும், எதிர்காலத்தில் பல சாதனைகளுக்கு வழி வகுக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டில் உள்ள பல்வேறுதெருக்கள், 700 ரயில்வே ஸ்டேஷன்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், பா.ஜ.க , அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு கிடைக்கும் பலன்களின் அளவு அதிகரித்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, 3லிருந்து, 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் நலனுக்காகவும், பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன், மருத்துவத்துக்கா முதியோர் செலவிடும்தொகை, மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது அந்ததொகை, கணிசமாக குறைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைதான், இதற்கு காரணம்.

உத்தர பிரதேசத்திம்  பிரயாக்ராஜில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலதிட்ட உதவிகளை வழங்குவதற்கும், புதியதிட்டங்களை துவக்கி வைப்பதற்கும் பிரதமர் மோடி நேற்று வந்தார். நல திட்ட உதவிகளை வழங்கிய பின், பிரதமர் பேசியது:

 

Comments are closed.