தினத் தந்தி நாளிதழின் பவளவிழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாமரமக்களை பத்திரிக்கை படிக்க ஆர்வத்தை தூண்டிய நாளிதழ் தினத்  தந்தி என்று பாராட்டினார். நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர் பிரதமர் மோடி என்றும், பொறுமை, தைரியம், அன்புள்ளம் கொண்டவர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்சூட்டினார். இந்தியாவை புதிய யுகத்துக்கு பிரதமர் மோடி கொண்டு செல்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன் பனுக்கு சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்விருதும், ஐ.ஏ.எஸ்.அதிகாரி இறையன் புவிற்கு சி.பா.ஆதித்தனார் இலக்கியபரிசும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷ த்திற்கு சிறப்பு சாதனை யாளர் விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்ற பிரதமர் மோடிக்கு, மெரினா கடற்கரை சாலையில் வழிநெடுகிலும் நின்ற மக்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களை நோக்கி கைஅசைத்தபடி மோடி சென்றார்.

Leave a Reply