நிர்வாக புலிகள், பொருளாதார சிங்கங்கள், ஜீரோ லாஸ் கரடிகள் — என்றெல்லாம் வேஷம் போட்டு, அன்னியன் அனாச்சார அடிமைகள் ஆட்சி நடத்தியபோது, லட்சக்கணக்கில் போலி பான் எண்தாரர்கள், உல்லாசமாய் தேசத்தை சுரண்டியிருக்கிறார்கள்.

“கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது, மோடியின் முயற்சி நாசமாகும்”, என்று சாபமிட்டுக் கொண்டும்,
“கருப்பு பணம் ரொக்கத்தில் இல்லை, வேறு வடிவங்களில் ஒளிந்திருக்கிறது” என்று கிளாஸ் எடுத்துக் கொண்டும், —

அலைந்த மேதாவிகளின், மற்றுமொரு மனக்கோட்டை, தற்போது இடிகிறது. போலி பான் எண்கள், கண்டறியப்பட்டு, களையெடுக்கப்படுகிறது. “கருப்பு பணத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?”, என்று அப்பாவி அப்பாவுகள், முழிக்கலாம். சாம்பிளுக்கு ரெண்டு:.

அ) 8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், 2 பான் எண் வைத்திருந்தால், ரூ3 லட்சத்தை வரையறுக்கப்பட்ட முதலீடு செய்து (80C போன்றவை) கழித்துக் கொண்டு, எஞ்சிய 5 லட்சத்தை, 2.5 லட்சம், 2.5 லட்சம் என கணக்கு காட்டி, வரி கட்டாமல் ஏமாற்றி தப்பித்துக் கொள்ளலாம்..

ஆ) வங்கி வைப்பு நிதி போன்றவற்றுக்கு, வெவ்வேறு பான் எண் கொடுத்து, வரி பிடித்தம் இல்லாமல், ஏமாற்றலாம். பிடித்தம் செய்தாலும், ரீஃபண்ட் கேட்டு, வாங்கிக் கொள்ளலாம்.

ஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன..ஸ்வயம் சேவக் ஆட்சியில், எத்தர்களை இறங்கி அடிப்பது தொடரும். கருப்பு பண அழிப்பு தொடரும்.

ஜி.எஸ்.டி.யும், கணிணி பதிவும், வருமான வரியுடன் அதை தொடர்புபடுத்தக்கூடிய சாத்தியக்கூறும், பலரை கலங்கடித்துள்ளன. ஜி.எஸ்.டி.யை எதிர்ப்பவர்களில், அதன் நிகர பலன்களை அறியாது எதிர்ப்பவர் சிலரே.

ஜி.எஸ்.டி எதிர்ப்பு போராட்டத்தின் பின்புலத்தில், ஒழுக்கக்கேடர்களும், அரசியல் வியாதிகளும் பெருமளவில் உள்ளனர், என்று நம்பலாம். அடிப்படையேதுமின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், இதற்கு சான்று பகர்பவை.

Leave a Reply