முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்துவந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை கைது செய்துள்ளனர். ஐஎன்எகு்ஸ் மீடியா முறைகேட்டிற்காக உதவியதாக கார்த்திமீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் அவர் கைது செய்யப் பட்டுள்ளார். இதே விவகாரம் தொடர்பாக ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், வெளிநாடுசென்று திரும்பிய கார்த்தியை, சென்னை பன்னாட்டு முனைய குடிமையியல் பிரிவல்(immigration section) வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Leave a Reply