மெர்சல் படவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசின் கொள்கை களை புகழும் விதமாகவே இனி படம் எடுக்கவேண்டும் என்ற சட்டம் வரலாம் என விமர்சித் திருந்தார். பராசக்தி படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவு களை எண்ணிப் பாருங்கள் என்றும் தெரிவித் திருந்தார்.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதில ளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, பராசக்தி திரைப்படம் தற்போது வெளியா னால் கோவில் களில் இருந்து அரசை மக்கள் வெளி யேற்றுவார் என தெரிவித் துள்ளார். அவரின் பதிவில்," இன்று பராசக்தி படம் வெளி யானால் கோவில்கள் கொள்ளை யர்கள் கூடாரம் ஆகக் கூடாது என்று மக்கள் அரசை கோவிலிலிருந்து வெளி யேற்றுவர்" என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply