வெளிநாட்டில் கோடிக் கணக்கில் சொத்துக்களை வாங்கிகுவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா என்று மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினிசிதம்பரம், அவர்களின் மகன் கார்த்திசிதம்பரம், கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி ஆகியோரின் மீது வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறையினர் கடந்த வெள்ளிக் கிழமை சென்னையில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதில் சிதம்பரம், அவர்களின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் ரூ.5.37கோடிக்கும் மேலான சொத்துக்களை வெளியிடாமல் வைத்து ள்ளதாக வருமானவரித் துறையினர் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வருமானவரித் துறையினரின் இந்த குற்றச்சாட்டை ப.சிதம்பரமும், அவர்களின் குடும்பத்தாரும் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளிநாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை அவர் இன்னும் வெளியிடாமல் உள்ளார். இதை பார்க்கும்போது, பாகிஸ்தானின் நவாஷ் ஷெரீப் செய்ததைப்போல் இருக்கிறது. நவாஷ் ஷெரீப் வெளிநாட்டில் வைத்துள்ள சொத்துக்களை வெளியிடாத காரணத்தால், அவரை பிரதமர் பதவிவகிக்க அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. அதுபோல் இங்கு காங்கிரஸ் கட்சி செய்யுமா.

ஒரு தேசியக்கட்சியின் மூத்த தலைவர் நிதி முறைகேட்டில் சிக்கிஇருப்பது அந்த கட்சிக்கு தெரியாமல் இருக்குமா. தங்களுடைய குடும்பத்தினர் வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களை வெளியிட முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் எப்படி மறந்திருப்பார். ப.சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணை நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தயாராக இருக்கிறாரா?

வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிதம்பரம் தன்னுடைய சொத்துவிவரங்களை முழுமையாக வெளியிடவில்லை. இதன் மூலம், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், வெளிநாடுகளில் இந்தியர்கள் சட்ட விரோதமாக பதுக்கிவைத்து இருக்கும் சொத்துக்களை கண்டுபிடிக்கவும் மோடி அரசு கொண்டுவந்த கறுப்புபணத்துக்கு எதிராக சட்டத்தையும் சிதம்பரம் மீறி இருக்கிறார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் மதிப்பின்படி, சிதம்பரத்தின் குடும்பத்தாருக்கு 14 நாடுகளில் சொத்துக்களில் சொத்துக்கள் உள்ளன, 21 வெளிநாட்டு வங்கிகளில் கணக்குஇருக்கிறது. இதில் 300 கோடி டாலர் பணம் டெபாசிட் செய்யப் பட்டு இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கறுப்புபணம் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணை குழுவை அமைக்காமல் தாமதம் செய்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் முதல் பணியாக அந்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply