மகாராஷ்டிராவில் பாஜக  உள்ளூர் தலைவர் உள்பட 5ந்து பேர் துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான முறையில் தாக்கியும் கொல்லப் பட்டனர்.

ஜல்காவன் நகரில் புஷவால் பகுதியைச் சேர்ந்த பாஜக  பிரமுகர் ரவீந்தரா காரத்தை வீட்டின் வெளியேவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ரவீந்தராவின் அலறல் சத்தம்கேட்டு வெளியே வந்த குடும்பத்தினர் மூன்று பேரையும் அவரது நண்பரையும் மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

இருப்பினும் ஆத்திரம்‌ அடங்காததால், அவர்கள் ஐந்துபேரையும் மூர்க்கத்தனமாக தாக்கி உள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா உள்ளூர் தலைவர் குடும்பத்தினருடன் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.