மக்களின் வங்கிகணக்கில் ஆளும்கட்சியனர் ஓட்டுக்கு பணம்போடுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கல்பாக்கத்தில் பாஜக திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திய அவர் செய்தியாளர்களிடம் இதனைதெரிவித்தார். பிரதமர் மோடியின் திட்டத்தை ஆளும்கட்சியனர் தவறாக பயன் படுத்தி மக்களின் வங்கிகணக்கில் ஓட்டுக்காக பணம் போடுவதாக தகவல்கள் வருவதாக அவர் கூறினார்.

தேர்தல்ஆணையம் இதனை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டத்திற்காக எலிபேட் அமைத்து தண்ணீர் பயன் படுத்துவதை குறைத்துகொள்ள வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply