மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை,'' என, பிரதமர், நரேந்திரமோடி கூறினார்.

டில்லியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் அலுவலகம், நிடி ஆயோக் மற்றும் பல்வேறு அமைச்ச கங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஊட்டச் சத்து குறைபாடு பிரச்னை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப் பட்டது; இதில், மோடி பேசியதாவது:நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படு வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறைந்த எடையில் குழந்தை பிறப்பு,ரத்த சோகை, ஆகியவற்றையும் தடுக்க, தீவிரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வரும், 2022ல், ஊட்டச் சத்து குறைபாடு தடுப்பு நடவடிக்கைகளுக்கான பலன்கள் தெரியவேண்டும். ஊட்டச் சத்து குறைபாடு குறித்து, மக்களிடம் விழிப் புணர்வு தேவை. அதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறுபேசினார்.

Leave a Reply