''முதல்வர் ஜெயலலிதா, மக்களை முட்டாளாக்க பார்கிறார். ஆனால், மக்களை யாராலும் ஏமாற்றமுடியாது,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் குற்றஞ்சாட்டினார்.

சென்னை ஆர்கே.நகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் எம்என்.ராஜாவை ஆதரித்து, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ்கோயல், நேற்று பிரசாரம் செய்தார்.

முன்னதாக, அவர் அளித்த பேட்டி:

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆர்கே.நகர் தொகுதி, எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. குடிநீர் பிரச்னையால், பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியாக இருந்தும், நீண்டகால பிரச்னையான கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள், மழை – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட, இங்கு யாரும் வரவில்லை. இந்ததொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தேர்வான பின், முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஓராண்டில், இருமுறை மட்டுமே, இங்கு வந்துசென்றுள்ளார்.

மக்கள் பிரச்னையை, உடனுக்குடன் தீர்க்கக் கூடிய தலைவரையே, மக்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா, மக்களை முட்டாளாக்க பார்க்கிறார். ஆனால், மக்களை யாராலும் ஏமாற்றமுடியாது. அவர்கள் தெளிவாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply