அடுத்தமாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தை மக்களை அவர்கள் வீட்டுக்கே சென்று நேரடியாக சந்திக்கும் திட்டத்தை பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.


வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து, வாக்காளர்களை நேரில்சந்தித்து பாஜகவின் சாதனைகளையும், எதிர் காலத் திட்டங்களையும் எடுத்துரைக்க உள்ளனர்.


மாநிலங்களவை உறுப்பினரா வதற்கு முன்பு கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் தாம் எம்.எல்.ஏ.,வாகப் பதவிவகித்த நரன்புரா சட்டப் பேரவைத் தொகுதியில் இந்தப்பிரசாரத் திட்டத்தை அமித் ஷா செவ்வாய்க் கிழமை தொடங்கி வைத்தார். பாஜக.,வினருடன் சிலவீடுகளுக்குச் சென்று குஜராத் அரசின் சாதனைகளை அமித்ஷா எடுத்துரைத்தார். அந்த இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தினரிடம் அவர் நலம் விசாரிக்கவும் தவறவில்லை.


பாஜக அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தையும் இல்லம்தோறும்  அவர்கள் விநியோகித்தனர்.முன்னதாக, ஆமதா பாதின் சோலா சாலையில் உல்ள அம்பாஜி அம்மன் கோயிலில் ஷா வழிபாடுமேற்கொண்டார்.


இதனிடையே, குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல், பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் இந்தப் பிரசாரத் திட்டத்தை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க் கிழமை தொடங்கி வைத்தனர்.


மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஜேபி.நட்டா, நிர்மலா சீதா ராமன், விகே.சிங், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோரும் இந்தத்திட்டத்தில் பங்கேற்கின்றனர்.குஜராத்தில் வரும் டிசம்பர் 9, 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-இல் நடைபெறும்.

Leave a Reply