பா.ஜ.,கட்சியில் தன்னை இணைத்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய குமார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களோடு நடித்துவரும் விஜயகுமார் பாஜக.,வில் இணைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; "யாருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை தேர்தல்நேரத்தில் தான் பிரதிபலிக்க முடியும். பிரதமர் பதவிக்கு மோடி போட்டியிடும்போதே அவர் மீது தனிமரியாதை உண்டு. அனைத்து வெளிநாடுகளுமே இந்தியாவை மிகப்பெருமை வாய்ந்த நாடாக தெரிந்து கொள்வதற்கு காரணம் மோடிதான். அதுமட்டுமன்றி ஒரு ஊழலற்ற ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். எல்லா மாநிலங்களில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது என்றால் மிகச் சிறப்பாக இருக்கும்.

அதனால் தான் அக்கட்சியின் வளர்ச்சிக்கு நம்மளும் ஒரு தூண்டுகோலாக இருப்போம் என்று என்னை இணைத்துக்கொண்டேன்” .

"ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு என தனிக்கொள்கைகள் வைத்திருக்கிறார்கள். அனைவருமே ஒன்றாக சேர்ந்துநின்றால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. கூட்டணியில் சேர்வது சேராதது என்பது அவர்களுடைய தனிப் பட்ட விருப்பம். பா.ஜனதா என்பது ஒரு மாநில கட்சியல்ல, அது ஒரு தேசியக்கட்சி. அனைத்து மாநிலங்களில் பா.ஜ.க சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது உடனடியாக மோடி வந்து சுற்றி பார்த்து, 2000 கோடி கொடுத்து, அதற்கு என்று தனியாக ஒருகுழு அமைத்தார். மத்திய அரசின் கடமையாக இருந்தாலும், அதை மோடி உடனடியாக செய்தார். அதுதான் அதில் சிறப்பு. தமிழ்நாடு நல்லாயிருக்கணும், இங்குள்ள மக்கள் சிறப்பாக இருக்கணும் என்று நினைப்பவர் மோடி. ஒருகட்சி திட்டம் போட்டால் மற்றொரு கட்சி அது வேண்டாம் என முட்டுக் கட்டை போடுகிறது. நல்ல விஷயங்கள் எதுவுமே நடக்க மாட்டுக்கிறதே என்று மோடி நினைக்கிறார். இப்படி எல்லாம் பிரச்சினைகள் இருந்துவருகிறது. ஆகவே தமிழ்நாட்டுக்கு ஒருசிறப்பான மாற்றத்தை பாரதிய ஜனதாவால் கொண்டுவர முடியும்

பாரதி ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். விரைவில் எந்ததொகுதியில் எப்போதும் பிரச்சாரம் என்று இன்னும் ஒருவாரத்தில் முடிவு செய்வேன்" என்று தெரிவித்தார் விஜயகுமார்.

Leave a Reply