தமிழகம் ஆன்மீக பூமிதான், இடையில் நாத்தி கர்கள் தமிழகத்தை  . தமிழகத்தை ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்க முயற்சிசெய்து வருகிறோம் என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை மேலும் கூறியதாவது:  மதுரையில் பாஜக மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது.  இதற்காக அகில இந்திய மகளிர்அணி தலைவர் விஜயா ரஹோத்கர் தமிழகம் வருகிறார்.  பாஜக தமிழகத்தில் எவ்வளவுவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் மாநாடாக இது அமையும்

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைத்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான கட்சி என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ராகுல் காந்தியை வைகோ புகழ்ந்துள்ளார். வைகோ புகழ்ந்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அத்துடன் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால் மக்கள் இதை மன்னிக்கமாட்டார்கள்.

காங்கிரஸ் இலங்கை தமிழர்களின் உயிரை எடுத்தது.   ஆனால் இலங்கை தமிழர்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட நலத்தி ட்டங்கள் வழங்கியதன் மூலம்  பாஜக அவர்களுக்கு உயிர்கொடுத்துள்ளது. தமிழக வளர்ச்சிக்கு பாஜக உதவியதன் காரணமாகவே அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்துள்ளது.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதசக்தியாக  பாஜக உருவாகியுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்குப்  பிறகு மக்களுக்கு ராகுல்மீதான  நம்பிக்கை, மரியாதை போய்விட்டது. கண்ணடித்து பிரபலமான தலைவர் ராகுல் மட்டும்தான். மக்கள் ராகுலை நம்பமாட்டார்கள். இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Leave a Reply