பதான்கோட் விமானப் படைத் தள தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத்அசாரை, தீவிரவாதியாக ஐ.நா. அறிவிக்க இந்தியா நட வடிக்கை எடுத்துவருகிறது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐ.நா. 2001-ல் தடைசெய்தது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் மீதும் தடைவிதிக்க இந்தியா முயற்சி எடுத்துவந்தாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலின் விதி முறைகளை இவ்விவகாரம் போதுமான அளவுக்கு நிறைவு செய்யவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா-ரஷ்யா-சீன வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் முத்தரப்பு ஆலோசனை கூட்டம் ரஷ்யதலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. இதில்பங்கேற்க சுஷ்மா ஸ்வராஜ் ரஷ்யா சென்றுள்ளார். அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிடம் இது தொடர்பாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

Leave a Reply