பாஜக மூத்ததலைவரும் தில்லி முன்னாள் முதல்வருமான மதன்லால் குரானா(82) உடல் நலக்குறைவால், நேற்று இரவு காலமானார். 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளை ரத்தஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர், கடந்த சிலநாட்களாக நெஞ்சுவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், நேற்று காலை முதல் உடல்நிலை மோசமடைந்து வந்தநிலையில் நள்ளிரவு காலமானார். அவருக்கு ஒருமகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது மற்றொரு மகன் கடந்த மாதம் இறந்தார்.

தில்லியில் 1993 முதல் 96 வரை தில்லி முதல்வராக பதவிவகித்துள்ளார். 2004-இல் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என குடும்பம் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் இரங்கல்: குரானா மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், மதன்லால் குரானாவின் திடீர்மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது டில்லி வளர்ச்சி பெறவும், உள்கட்டமைப்பிற்காகவும் கடுமையாக உழைத்தார். கடினஉழைப்பாழி, சிறந்தநிர்வாகி என பெயர் எடுத்துள்ளார்.

தில்லியில் பாஜகவை வலிமைப்படுத்த அவர் ஆற்றியபணிகள் எப்போதும் நினைவு கொள்ளப்படும். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் நினைவாக தனது எண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார். 

Tags:

Leave a Reply