மத்தியப் பிரதேச அமைச்ச ரவைவை அந்த மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் வியாழக்கிழமை விரிவாக்கம் செய்தார். இரண்டு மூத்த அமைச்சர்களின் பதவியை பறித்துள்ளவர், 9 புதிய அமைச்சர் களைச் சேர்த்துள்ளார்.

பிரதமராக நரேந்திரமோடி கடந்த 2004ஆம் ஆண்டு பதவியேற்ற போது, தனது அமைச்சரவையில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வில்லை. அதேபாணியில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் தனது அமைச்சரவையை வியாழக் கிழமை மாற்றியமைத்தார். அவரது அரசில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்களான பாபு லால் கௌர்(85), சர்தாஜ்சிங்(76) ஆகியோர் அமைச்சர்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களில் பாபுலால்கௌர் கடந்த 2004-2005 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வராக பதவி வகித்துள்ளார். வாஜ்பாய் தலைமையில் கடந்த 1996ம் ஆண்டு அமைந்த 13 நாள் அரசில் சர்தாஜ் சிங் அமைச்சராக இருந்தார்.

இதனிடையே, சிவராஜ்சிங் சௌஹானின் அமைச் சரவையில் அர்ச்சனா சிட்னிஸ் உள்ளிட்ட 9 புதிய அமைச்சர்கள் வியாழக் கிழமை சேர்க்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் கேபினட் அந்தஸ்திலும், 5 பேர் இணையமைச் சராகவும் பதவியேற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் ராம் நரேஷ்யாதவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply