பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தமிழகத்தைசேர்ந்த நிர்மலா சீதா ராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்றுகொண்டனர்.

 

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில்,பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திரபிரதான், மின்சாரத்துறை இணையமைச்சராக இருந்த பியூஸ்கோயல், தமிழகத்தைசேர்ந்த வர்த்தகத்துறை இணை யமைச்சர் நிர்மலாசீதாராமன், பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர்.

உ.பி.,யை சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால் சிங், பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் செளபே, ஆர்.கே .சிங், ம.பி.,யை சேர்ந்த வீரேந்திரகுமார் , கர்நாடகாவை சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், அல்போன்ஸ் கண்ணந்தனம் , ஹர்தீப் சிங்பூரி ஆகிய 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பரிமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ராமகாஜன், பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply