டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகநதிகளை இணைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நிதின்கட்கரியைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் தமிழகத்தில் நிலவும் குடி நீர் பிரச்னை மற்றும் பாசனத் திற்கான தண்ணீர் தேவைகுறித்து பேசினார். தமிழக நதிகளின் உபரிநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தவிர்க்க அவற்றை இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசிய ஆளுநர், கன்னியா குமரி மாவட்டத்தில் புயல்நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply