மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களே அசாமில் பா.,ஜனதாவுக்கு கிடைத்தவெற்றிக்கு காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப் பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து டெல்லியில் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். சாமானியரின் வாழ்க்கையை மாற்று வதற்கான தங்களது முயற்சிகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமே அசாம்மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்தவெற்றி என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது நாட்டுமக்கள் பாஜக.,வை ஏற்று கொண்டிருப்பதற்கான அடையாளம் என்று அவர் தெரிவித்துள்ளார். அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக 89 இடங்களை பிடித்து வட கிழக்கு மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. அசாமில் ஆளும் காங்கிரஸ்கட்சி 24 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

Leave a Reply