மத்திய அரசின் மண்வள அட்டை திட்டம், பயிர்காப்பீடு திட்டம் ஆகியவற்றின் விளம்பரத்தூதராக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.


இதுகுறித்து தில்லியில் மத்திய வேளாண் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மண்வள அட்டை திட்டம், பயிர்காப்பீடு திட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களாகும். இந்தத்திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அப்படிச் செய்தால்தான், அந்தத் திட்டங்களின் பலன்கள் விவசாயிகளைச் சென்றடையும்.


எனவே, இந்தத்திட்டங்கள் குறித்து தொலைக் காட்சிகள் மூலம் செய்யப்படும் விளம்பரங்களுக்கு அக்ஷய்குமாரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.இந்தத் திட்டங்கள் மட்டுமன்றி, பிரதம மந்திரி பசல்பீமா யோஜனா, பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சய் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களின் தூதராகவும் அக்ஷய்குமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply