சேலத்தில் பா.ஜ.க மத்திய அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்ககூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள பெங்களூரில் இருந்து மத்திய சட்டதுறை மந்திரி சதானந்தகவுடா சேலத்திற்கு வந்தார்.

அப்போது மத்திய மந்திரி சதானந்த கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார். அதில், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என கேட்டுள்ளார்.

நான் தற்போது சட்டதுறை மந்திரியாக இருந்துவருவதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளதால் தற்போது அதற்கு பதில்கூற முடியாது.

கர்நாடக அரசு அணைகட்ட தீவிரம் காட்டி வருகிறது. மேக தாதுவில் அணை கட்டுவதில் மக்களை பொருத்தவரையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

ஆனாலும், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து மாநில நலனுக்கும் பாடுபடும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply