குஜராத் மற்றும் இமாசலபிரதேச சட்டமன்ற தேர்தல் களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடத்தப் பட்டது.  இதில் தொடக்கத்தில் இருந்தே மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வந்தது.  இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதீய ஜனதா கட்சி குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டமன்ற தொகுதிகளுக்கான பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றது.

 

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதேபோன்று 68 உறுப்பினர்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்துள்ளது.  இதன்மூலம் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18-லிருந்து 19 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்த நிலையில், பாரதீய ஜனதாவின் ஆட்சி மன்றகுழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் தொடங்கியது.

 

இந்தகூட்டத்தில் குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் அக்கட்சி பெற்ற வெற்றி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

 

இந்த ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மத்திய இணைஅமைச்சர் கிருஷ்ண ராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதனை யடுத்து சிகிச்சைக்காக கிருஷ்ண ராஜை ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Leave a Reply