மத்தியில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே அடுத்த பாராளுமன்றதேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.

பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதற்கு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஆட்சியில் தாங்கள் செய்த சாதனைகளை மக்கள் முன் சொல்லித்தான் ஓட்டுவாங்க முடியும். எனவே மத்திய அரசு இதுவரை நிறைவேற்றி உள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வுசெய்து வருகிறார். குறிப்பாக அவர் அறிவித்த மிக முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறார்.
 

நாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கும்திட்டமான ‘ஆயுஷ்மேன் பாரத்’ திட்டத்தின் செயல்பாடுகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்கிறார்.

 


ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள முத்ராகடன் வழங்கும் திட்டம், உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், விவசாயி களுக்கான மானிய திட்டம் ஆகியவை சரியான முறையில் செயல்படுகிறதா? என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

திட்டங்கள் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து திட்டங்களை சிறப்பாகசெயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply