• இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்புவாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். இந்த 5 இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் இடம்பெறும்.
 • 2022 க்குள் இந்திய விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன், 2020-2021 நிதியாண்டில், விவசாய துறைக்கு 2.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இதில், விவசாயிகளின் நலனுக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 • சென்னை – பெங்களூரு இடையே மற்றும் டெல்லி – மும்பை இடையே வர்த்தக வழித் தடங்கள் உருவாக்கப்படும்.
 • சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து நிறைய தேஜஸ்வகை ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு மட்டும் 1.7 லட்சம்கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • பெண்களுக்கான திருமணவயது 18 என்று தற்போது உள்ள நிலையில், அதனை மீண்டும் ஆய்வுசெய்து அந்த வயது வரம்பை அதிகரிக்க சிறப்பு ஆய்வுக்குழு அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 • லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் (எல்.ஐ.சி.) அரசு பங்குகளை விற்க முடிவெடித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.
 • ஜி.எஸ்.டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு புதிய எளியவழிமுறை ஏப்ரல் 2020 முதல் அமலாகும்.
 • 2024க்குள் நாடுமுழுவதும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
 • அடுத்த 3 ஆண்டுக்குள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை பொருத்த மாநில அரசு உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நபார்டு மறுமுதலீட்டு திட்டம் விரிவாக்கப்படும். மீன் உற்பத்தியை 200 லட்சம் டன் என்ற அளவுக்கு அதிகரிக்க விவசாயத்திற்கும் பாசனத்திற்கும் 2.83 லட்சம்கோடி ஒதுக்கப்படும்.
 • இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் நலன் பாதுகாக்கப்படும் . மத்திய அரசில் Non Gazeetted பணிகளில் சேருவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்படும்.
 • நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதமாக வைக்க வேண்டும் என்பது நடப்பு நிதியாண்டுக்கான இலக்கு. இது அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.8 சதவீதமாகும்.
 • காலணிகள் மற்றும் அறைகலன்கள் (ஃபர்னிச்சர்) மீதான சுங்கவரி உயர்த்தப்படுகிறது.
 • பல தளங்களில் நிலுவையில் உள்ள நேரடிவரி செலுத்துவோர் கோரிக்கைகளைத் தீர்த்துவைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம்.
 • ஜி.எஸ்.டி. பணம் திரும்பப்பெறும் முறை எளிமைப்படுத்தப்படும்.
 • நிரந்தர வருமான வரிக்கணக்கு எண் (பேன்) உடனடியாக வழங்குவதற்கு புதிய முறை ஏற்படுத்தப்படும்.

Comments are closed.