மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்  மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அங்கு பா.ஜ.க  அரசு அமைத்துள்ளது.

இதேபோல மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகவிரும்புவதாக நான் கருதுகிறேன். இதனால் இந்த 3 மாநிலத்திலும் விரைவில் பா.ஜனதா ஆட்சிஅமையும்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் 99.99 சதவீதம் நம்பிக்கை வைத்திருப்பதைதான் இது காட்டுகிறது.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரான மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கூறியது

Comments are closed.