நல்ல ஆரோக்கி யத்தையும், நல்வாழ்வையும் யோகாபயிற்சி மூலம் பெறமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சர்வதேச யோகாதினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, யோகா பயிற்சிசெய்தார். நிகழ்ச்சியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அனை வருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்வது பெரும் பாக்கியம். இன்று சூரியன் உதிக்கும் இடமெல்லாம் யோகா நடைபெறுகிறது. இதற்காக இந்தியா பெருமைகொள்கிறது. நாள்தோறும் யோகா செய்து சூரியனை வரவேற்போம். டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை எங்குபார்த்தாலும் இன்று யோகாதான்.
 

யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. அவசர அவசரமாக பணிக்கு செல்ப வர்களும் தினமும் யோகாசெய்வது அவசியம். யோகா செய்வதால் உடல், மனம், ஆன்மாவை அமைதிப் படுத்தலாம். யோகாவால் மன அமைதிகிடைக்கும்; எதிர் காலத்தை கட்டமைக்க முடியும். மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா. என அவர் தெரிவித்தார்.

Leave a Reply