தொடர்ந்து இந்துமதத்தையும் இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிவருவதாக குற்றச் சாட்டிற்கு ஆளாகியுள்ள மனுஷ்ய புத்திரனை உடனடியாக திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மனுஷ்ய புத்திரன் கடந்த 2015ம் ஆண்டு திமுக.,வில் இணைந்தார். மேலும் அவர் தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராகவும் விளங்கி வருகிறார். நினைக்கும் போதெல்லாம் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் அளவிற்கு தி.மு.கவில் முக்கியமான ஒரு நபராக மனுஷ்யபுத்திரன் விளங்கி வந்தார். 

இதற்கு காரணம் சமூக வலை தளங்களில் மனுஷ்ய புத்திரன் மிகவும் ஆக்டிவாக இருந்தது மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க.,விற்கு ஆதரவாக களம் இறங்கி எதிர் கட்சியினரை மிரள வைத்தது போன்றவை தான். ஆனால் கடந்த சிலமாதங்களாக மனுஷ்யபுத்திரனை சந்திப்பதை ஸ்டாலின் தவிர்த்து வருகிறார். கலைஞர் மறைவை தொடர்ந்துகூட ஸ்டாலினை சந்தித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரை மனுஷ்யபுத்திரன் ஸ்டாலினை சந்திக்கவில்லை. இதற்கு காரணம் ஸ்டாலின் மனுஷ்ய புத்திரனை சந்திக்க விரும்பாதது தான் என்கின்றனர் தி.மு.க.,வினர். ஏனென்றால் அண்மைக்காலமாக பா.ஜ.கவிற்கு எதிராக எழுதுவதாக கருதிக் கொண்டு இந்த மத நம்பிக்கைகளையும், இந்து கடவுள்களையும் விமர்சிக்கும் தொனியிலும் கேலிசெய்யும் தொனியிலும் மனுஷ்யபுத்திரன் பேசுவதே.

ஆண்டாள் விவகாரத்தில் வைர முத்துவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவாக அறிக்கை வெளியிட்டது தி.மு.கவினரையே கோபம் அடையச்செய்தது. ஏனென்றால் கோடிக்கணக்கான இந்துக்கள் தெய்வமாக கருதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியவார்த்தைகள் அப்படி. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட்டதை அவரது குடும்பத்தினரே கூட விரும்பவில்லை. மேலும் இந்துமதம் மற்றும் கடவுள் விஷயத்தில் கலைஞர் பாணி வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு பலரும் ஆலோசனை கூறி வருகின்றனர். இதனை ஏற்று முடிந்த அளவிற்கு ஸ்டாலின் இந்துமதம் மற்றும் கடவுளுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைப் பதில்லை. இந்த நிலையில் தான் கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டதற்கு அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என அம்மாநில அரசு கூறியதே காரணம் என்று சமூக வலைதளங்களில் பெரும் பாலானவர்களின் எண்ணம்  . இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதாக கருதிக்கொண்டு மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதைதான் இந்துக்களின் மனதை கடுமையாக புண் படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாகவே பா.ஜ.கவினரும் இந்துக்களும் மனுஷ்யபுத்திரனை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் மிரட்டல்களும் விடுக்க ஆரம்பித்தனர். இதனால் பயந்து போன மனுஷ்யபுத்திரன் உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார்அளித்தார். ஆனால் தற்போதுவரை தனது கட்சியின் பேச்சாளரான  மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் எதுவும்பேசவும் இல்லை, அறிக்கையும் வெளியிட வில்லை. அத்துடன் தி.மு.கவின் சில மூத்த நிர்வாகிகள் என்ன தான் மனுஷ்யபுத்திரன் நல்ல பேச்சாளராகவும், சமூகவலைதள செயல்பாட்டாளராக இருந்தாலும் அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்கிற ஒருதோற்றம் உருவாகிவிட்டது. எனவே அவரை தி.மு.கவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply